Purusothaman Ramanujam

Purusothaman Ramanujam

Personal Blog

26 Apr 2015

நிம்மதி சூழ்க!

சில நாட்களுக்கு முன்பு என் அலுவலக நண்பர் திரு.கோபி மூலமாக ஒரு பாடலை கேட்க நேர்ந்தது. நான் பல தத்துவ பாடல்களை இதற்கு முன் கேட்டிருந்தாலும், இந்த பாடலின் ஆழம் என்னை ஏதோ செய்தது.

இது மரண ஒலமல்ல.. மரண கீதம். சொந்தங்களை இழந்தவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி  தரும் என்று நம்புகிறேன்.

இதைவிட அர்த்தமுள்ள படலை இனி எழுத முடியுமா என்பது சந்தேகம்தான். கவிஞர் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலில் எனக்கு பிடித்த சில வரிகள் இதோ.

ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே?

மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை

வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றோளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மனதை பிழியும் குரலில்  இந்தப் பாடலை கேளுங்கள்.

Youtube Link

இதோ பாடல் வரிகள்.

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும் கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை


பாசம் உலாவிய கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?

தேசம் அளாவிய கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே?

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக

மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க

எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக

எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க


பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை

இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை

நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை

மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை


தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை

நதி மழை போன்றதே விதியென்று கண்டும்

மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன!

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்

மரணத்தினால் சில சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்

விதை ஒன்று வீழ்ந்திட செடி வந்து சேரும்


பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்

யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்

நித்திரை போவது நியதி என்றாலும்

யாத்திரை என்பது தொடர் கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்

சூரிய கீற்றோளி தோன்றிடும் போதும்

மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்

மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்


மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க்க!

தூயவர் கண்ணொளி சூரியர் சேர்க!

பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!

போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

Categories